search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு விற்பனை"

    • சங்கத் தலைவர் எ.வி.தனபால் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.
    • .ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை தொடக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் எ.வி.தனபால் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். துணைத்தலைவர் வி.பழனி, பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார் தற்போதைய துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், சங்க இயக்குனர்கள், பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    பொதுமக்கள் சேவைக்காக உயர்ரக பட்டாசு ரகங்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தலைவர் எ.வி.தனபால் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசியில் பெய்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பாதித்தது. கம்பி, மத்தாப்பூ, புஸ்வானம் போன்ற குறிப்பிட்ட பட்டாசுகள் தேவை அதிகமாக உள்ளது.
    • பசுமை பட்டாசு மட்டுமே விற்கப்படுவதால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை யொட்டி சிறப்பு பட்டாசு கடைகள் அமைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால் முற்றிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதால் அதன் உற்பத்தி குறைந்துள்ளது. அதன் காரணமாக 35 பட்டாசு கடைகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளன. ஆனால் போதுமான அளவு பட்டாசு சிவகாசியில் இருந்து வரவில்லை.

    தேவைக்கு குறைவாகவே பட்டாசு வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு முன் 3 நாட்களில் தான் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும். 40 சதவீத பட்டாசு உற்பத்தி குறைந்ததால் 30 சதவீதம் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    பட்டாசு தயாரிக்க கூடிய மூலப்பொருட்கள் விலை மற்றும் பாக்கெட் செய்வதற்கான பொருட்கள் செலவு அதிகரிப்பால் பட்டாசு விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரி புனிதன் கூறும்போது, பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை உயர்வால் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. பாதுகாப்பான பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அவற்றின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    சிவகாசியில் பெய்த மழை காரணமாக உற்பத்தி பாதித்தது. கம்பி, மத்தாப்பூ, புஸ்வானம் போன்ற குறிப்பிட்ட பட்டாசுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் அதன் உற்பத்தி குறைவாக உள்ளன என்றார்.

    இதுகுறித்து ஜார்ஜ் டவுன் பட்டாசு விற்பனையாளர் சங்க தலைவர் அனிஸ் ராஜா கூறியதாவது:-

    சென்னைக்கு தேவையான அளவு பட்டாசை விட குறைவாகவே வந்துள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் மேலும் கூடுதலாக பட்டாசு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பசுமை பட்டாசு மட்டுமே விற்கப்படுவதால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    அதன் காரணமாக பட்டாசு விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கக்கூடிய பட்டாசுகள் குவிந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    • கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை.
    • பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பட்டாசுக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி பேசியதாவது:-

    அரசு அனுமதி பெற்று பட்டாசு கடைகள் நடத்தினாலும் அங்கு எந்த காரணத்தை முன்னிட்டும் வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசு கடைகள் நடத்த கூடாது.

    கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை. பட்டாசு கடைகளில் புகைப்பிடிக்க கூடாது என்று எழுதப்பட்ட வாசகம் அவசியம் இருக்க வேண்டும். பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சம்பத், செயலாளர் துளசிநாதன், பொருளாளர் நரேந்திரன் உள்பட பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    சேலம் மாவட்ட கூட்டுறவு பட்டாசு கடைகளில் தரமான பட்டாசுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் சிவகாசியிலிருந்து ஸ்டேண்டர்டு, அணில் போன்ற சிறந்த கம்பெனிகளிலிருந்து ரூ.1.36 கோடி அளவில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் (பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி) பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. மேலும் இளம்பிள்ளை தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, காடையாம்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, மேட்டூர் அரசு பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை, ஸ்வர்ணபுரி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை என்ஜீஜிஓ தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைமையகங்களில் மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நியாயமான விலையில் தரமான பட்டாசுகளை வாங்கி பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

    • டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பட்டாசு தடையால் சிவகாசியை சுற்றி உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

    சென்னை:

    டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், வேறு எந்த மாநிலத்திலும் தடை விதிக்காதபோது டெல்லியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ள அவர், பட்டாசு தடையால் சிவகாசியை சுற்றி உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். 

    • தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
    • உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.

    உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப்படுவது உண்டு.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும்.

    இந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு-பகலாக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    பட்டாசுகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ஆய்வு செய்து உரிமம் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.

    சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப்படுவது உண்டு. இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி தீவுத்திடல் மைதானத்தில் 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் ஒவ்வொன்றும் தலா 3 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பட்டாசு கடைகள் அருகே செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தீவுத்திடல் பட்டாசு கடைகளில் அக்டோபர் 11-ந் தேதி விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி வரை அங்கு பட்டாசு விற்பனை நடைபெறும்.

    மொத்தம் 15 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும்.

    ×